வேதாகமத்தை வாசிப்பது எப்படி: வேதாகமம் என்றால் என்ன?
நீதி
நீதி என்றால் என்ன? யார் அதற்கான விளக்கத்தைச் சொல்ல முடியும்? வேதாகமத்தின் நீதி என்ற கருத்தைக் கவனித்து அது எப்படி வேதாகமத்தின் சரித்திரப் பட்டியலிலும் இயேசுவை நோக்கி சுட்டிக் காட்டுவதிலும் அது எப்படி ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையும் காணுங்கள். #BibleProject #வேதாகமம் #நீதி
தாராள மனம்
வேதாகமத்தின் வரலாற்றில், தேவன் தாராள மனமுள்ள ஒருவராக தனது விருந்தினருக்குத் தேவையானவை அனைத்தையும் கொடுக்கின்றவராகக் காட்டப்படுகிறார். ஆனாலும், மனிதர்கள் ஏழ்மையான மனநிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். தேவனின் பல வரங்களைப் பதுக்கி வைத்திருப்பவர்களாகவே இருக்கின்றனர். இந்தக் காணொளியில் தன்னையே இயேசு என்னும் நபரில் உன்னதமான பரிசைக் கொடுத்ததன் மூலம் நமது சுயநலத்தில் இருந்து வெற்றி பெறுவதற்கான தேவ திட்டத்தைக் காணவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #தாராளமனம்
யோபு
வாழ்க்கை நியாயமாக இல்லாமல் நல்ல காரணத்துக்காக நீங்கள் பாடுபடும் போது தேவனை விசுவாசிப்பீர்களா? கர்த்தர் உலகத்தை ஞானத்தால் இயக்குகிறார் என்பதற்கு பொருள் என்ன என்பதைப் பற்றிக் காண யோபு நம்மை வரவேற்கிறார். இந்த உண்மையானது எப்படி இருண்ட நேரங்களில் நமக்கு சமாதானத்தைக் கொடுக்க முடியும்? வேதாகம ஞானத்தைப் பற்றிப் பேசும் மூன்று புத்தகங்களில் யோபு கடைசியானதாகும். #BibleProject #வேதாகமம் #யோபு
பிரசங்கி
இந்தப் புத்தகத்தில் பிரசங்கியின் சந்தேகக் குரலைக் கேட்கலாம். நீதிமொழிகள் புத்தகத்தின் படி வாழ்வதால் எப்போதுமே நேர்மறையான விளைவுகள் கிடைப்பதே இல்லை என்கிறார் இவர். சில நேரங்களில் வாழ்க்கை கடினமானதாகவும் தெளிவான விளக்கங்களை எல்லாம் எதிர்ப்பதாகவும் இருக்கின்றது. இந்த அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டே நீங்கள் எப்படி ஞானத்தையும் தேட முடியும்? பிரசங்கி வேதாகம ஞானப் புத்தகங்களில் இரண்டாவது ஆகும். #BibleProject #வேதாகமம் #பிரசங்கி
நீதிமொழிகளின்
இந்தப் புத்தகமானது, ஒரு தலைமுறை காலத்து தெய்வீக புத்திசாலிகளான மக்களின் ஞானத்தின் திரட்டாக இருக்கிறது. வாழ்வின் நல்ல தன்மையையும்,கர்த்தருக்குப் பயப்படுதலையும் அதிகம் ஆதரிக்கின்றது இது. இதன் மூலமாக உண்மையிலேயே நல்ல வாழ்வை நீங்கள் அனுபவிக்க முடியும். வேதாகமத்தின் ஞானத்தைப் பற்றிய கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும் மூன்று புத்தகங்களில் நீதிமொழிகளின் புத்தகமும் ஒன்றாகும். #BibleProject #வேதாகமம் #நீதிமொழிகளின்
தேவனின் குணாதிசயம்: இரக்கம்
#BibleProject #வேதாகமம் #இரக்கம்
கண்ணோட்டம்: எஸ்தர்
எஸ்தர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். எஸ்தரில் தேவன் மற்றும் அவருடைய செயல்பாட்டைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடாமல் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இஸ்ரவேலர்களை கொண்டு தேவன் தம் மக்களை சில அழிவுகளிலிருந்து மீட்பதற்காக பயன்படுத்துகிறார் #BibleProject #வேதாகமம் #எஸ்தர்
கண்ணோட்டம்: எஸ்றா-நெகேமியா
எஸ்றா, நெகேமியா புத்தகங்களின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். எஸ்றா மற்றும் நெகேமியா வில் பல இஸ்ரவேலர்கள் எருசலேமுக்கு திரும்புகிறார்கள். மேலும் பல ஆவிக்குரிய மற்றும் தார்மீக தோல்விகளையும் சில வெற்றிகளையும் எதிர்கொள்கிறார்கள். #BibleProject #வேதாகமம் #எஸ்றாநெகேமியா
கண்ணோட்டம்: தானியேல்
தானியேல் புத்தகத்தில் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன போதிலும் விசுவாசமாக இருக்க தானியேலின் கதை ஊக்கப்படுத்துகிறது. தேவன் எல்லா தேசங்களையும் அவருடைய ஆட்சியின் கீழ் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையை தானியேலின் தரிசனங்கள் அளிக்கிறது #BibleProject #வேதாகமம் #தானியேல்
கண்ணோட்டம்: பிரசங்க
பிரசங்கி புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம்.இந்த புத்தகம் மரணம்,மற்றும் குறிப்பான நோக்கம் ஏதுமற்ற வாய்ப்பை எதிர்கொள்ள நம்மை வற்புறுத்துகிறது.மேலும் அவை கடவுளின் நன்மை குறித்த அப்பாவித்தனமான நம்பிக்கைக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. #BibleProject #வேதாகமம் #பிரசங்க