விசுவாசம், வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை பற்றி போதிக்கும் போது ஊக்குவிக்கும் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இந்த தொடரில் எங்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு எபிசோடும் நம்பிக்கையை கண்டறிவது மற்றும் நம்மை விட உயர்ந்த ஒன்றோடு இணைவது பற்றிய சம்பவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்கிறது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பாடங்களுடன் எவ்வாறு சவால்களை எதிர்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை பிரகாசிக்க செய்வது என்று பார்வையாளர்கள் கற்றுக் கொள்ள நாங்கள் உதவுகிறோம் இந்த எபிசோடில்: எண்ணங்கள், பொய்கள், ஆவிக்குரிய வாழ்க்கை, பைபிள் வசனம். நீங்கள் நினைக்கிற மாதிரியே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணங்கள் உங்களை எங்கே கொண்டு செல்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? அவைகளை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் அவைகள் உங்களை கட்டுப்படுத்தலாம். இது சிந்தனை தணிக்கைக்கான நேரமாக வைத்துக் கொள்ளலாம்--உங்களுடைய தினசரி எண்ணங்களை பதிவு செய்து நீங்கள் நம்புகிற பொய்களை பாருங்கள். எந்தப் பொய்கள் உங்களை பனைய கைதியாக வைத்திருக்கின்றது? அவற்றை மாற்ற உங்களுக்கு தேவையான சத்தியத்தை பைபிள் வசனங்களில் தேடுங்கள்.
நீங்கள் நினைக்கிற மாதிரியே நீங்கள் இருக்கிறீர்கள்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்