மனித மனதைப் பற்றி வெவ்வேறான கலாச்சாரங்களில் அது எப்படிப்பட்டது, அது என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பற்றி வெவ்வேறான புரிதல்கள் இருக்கும். வேதாகம எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்தக் காணொளியில் இதயம் என்பதற்கான ஆதிகாலத்து யூத சொற்கள் என்ன என்பதைக் காணவிருக்கிறோம். அத்துடன் நம் இதயத்தைக் குறிக்கும் வெவ்வேறான கருத்துக்களையும் பார்க்கவிருக்கிறோம். மனித சிந்தனை, உணர்ச்சி, விருப்பம் போன்றவற்றைக் குறிக்க வேதாகமத்தில் அருமையானதும் வளமானதுமான இதை விட சிறந்த சொல் ஒன்று இல்லை. சொற்களைக் கற்கும் நமது தொடர் காணொளிகளில் இது நான்காவது தவணையாகும். இது ஆதிகாலத்து வேதாகம ஜெபமாகிய ஷேமா என்பதைப் பற்றி ஆழமாகப் பார்க்கின்ற ஆறு பகுதிகளுள்ள ஒன்றாகும். இந்த ஜெபத்தில் உள்ள அனைத்து முக்கிய சொற்களையும் பற்றி நாம் விரிவாகக் காணவிருக்கிறோம். அவற்றின் மூல மொழியில், அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் அவற்றுக்கான பொருள் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #இதயம்
லெவ்/இதயம்
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்