அவான்: அக்கிரமம்
பெஷா: மீறுதல்
“மீறுதல்” என்பது உங்களுக்கு நன்றாகப் புரிந்த ஒரு வேதாகம வார்த்தையைப் போல இருக்கும். ஆனால் அதைப் பற்றி இன்னொருவருக்கு விளக்கும் சூழலில் அது குழப்பமாக இருக்கலாம். இந்தக் காணொளியில் நாம் இந்த சுவராசியமானதும் சிக்கலானதுமான இந்த வேதாகமத்தில் காணப்படும் கெட்ட வார்த்தையின் பொருளைக் கற்றுக் கொள்ளப் போகிறோம். மனுக்குலத்தின் நிலையைப் பற்றிய தெளிவான சிந்தனையைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாகுங்கள். #BibleProject #வேதாகமம் #மீறுதல்
கட்டா / பாவம்
பாவம் என்ற சொல்லானது வேதாகமத்தில் காணப்படும் பொதுவான ஒரு கெட்ட வார்த்தையாகும். ஆனால் அதற்கு உண்மையிலேயே பொருள் என்ன? இந்தக் காணொளியில் இந்த வேதாகம வார்த்தையின் பின்னணியில் மறைந்திருக்கும் “ஒழுக்கத் தோல்வி” என்னும் கருத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். மனித குலத்தின் நிலையைப் பற்றிய ஆழமானதும் நிஜமானதுமான சித்திரத்தைக் காண ஆயத்தமாக இருங்கள். #BibleProject #வேதாகமம் #பாவம்
யார் இயேசு
இயேசு யார், தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய அவருடைய செய்தி உண்மையில் எதைப் பற்றியது? எங்களின் சமீபத்திய வேதாகம அடிப்படைகள் வீடியோவைப் பாருங்கள், இயேசு யார்? #BibleProject #வேதாகமம் #
பைபிள் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பது
வேதாகமத்தின் மொழிபெயர்ப்புகள் பல உள்ளன, ஆனால் எது சிறந்தது? மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுப்பதை எவ்வாறு அணுகுவது என்பதைப் புரிந்துகொள்ள எங்கள் சமீபத்திய வேதாகம அடிப்படைகள் வீடியோவைப் பாருங்கள். #bibleproject #வேதாகமம் #பைபிள்மொழிபெயர்ப்பைத்தேர்ந்தெடுப்பது
மலைப்பிரசங்கம் EP10
இயேசுவின் போதனைகளின் மிகவும் பிரபலமான தொகுப்பான மலைப்பிரசங்கத்தை ஆராயும் பத்தாவது பாகத்தில் எங்களுடன் சேருங்கள். இந்த வீடியோவில், நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்: • “பரலோக ராஜ்யம்” என்று இயேசு எதை சொன்னார் • அகலமான மற்றும் குறுகிய வாசலை பற்றிய உவமையின் பொருள் • “ஆட்டுத்தோல் அணிந்த ஓநாய்களை” எவ்வாறு அடையாளம் காண்பது • பாறை மற்றும் மணலின் மீது கட்டப்பட்ட இரண்டு வீட்டின் உவமையின் பொருள் #BibleProject #வேதாகமம் #மலைப்பிரசங்கம்
மொழிபெயர்ப்பு வரலாறு
வேதாகமத்தின் ஆரம்பகால மொழிபெயர்ப்புகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எங்கள் சமீபத்திய வேதாகம அடிப்படைகள் என்கிற வீடியோ மூலம் பைபிள் மொழிபெயர்ப்புகளின் வரலாற்றைப் பற்றிய ஒரு விரைவான அறிமுகத்தைப் பெறுங்கள். #bibleproject #வேதாகமம் #மொழிபெயர்ப்புவரலாறு
தேவன்
வேதாகமத்தில் காட்டப்பட்டிருக்கும் தேவன் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியவர் அல்ல. ஆனால் நாம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை நம்மால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தால் அது எப்படி இருக்கும்? இந்தக் காணொளியில் நாம் தேவனது சிக்கலான அடையாளம் எப்படி வேதாகமத்தின் சரித்திரத்தில் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது என்பதையும், ஆச்சரியமான விதமாக அவை அனைத்தும் இயேசுவையே நோக்கி நம்மை சுட்டிக்காட்டுகின்றன என்பதையும் காண்கிறோம். #BibleProject #வேதாகமம் #தேவன்
மேட்/பலம்
முழுப் பலத்துடனும் தேவனை நேசிப்பது என்றால் என்ன? ஷேமா காணொளிகளின் இறுதித் தவணையில் நாம் இந்த வாக்கியத்தின் அடியில் இருக்கும் எபிரேய சொல்லைப் பற்றிக் காணப் போகிறோம். இந்த அடர்த்தியான சொல்லுக்கு பலம் என்பது போக மேலும் பல பொருள்களும் இருக்கின்றன என்பது நாங்கள் முன்பே உங்களிடம் சொல்லும் ஒரு இரகசியமாகும். #bibleproject #வேதாகமம் #பலம்
நெபேஷ்/ஆத்துமா
ஆத்துமா என்று அடிக்கடி மொழியாக்கம் செய்யப்படும் நெபேஷ் என்ற எபிரெய சொல்லை ஷேமா தொடரின் கடைசிக்கு முந்திய தவணையாகிய இந்த காணொளியில் நாம் ஆழமாகப் பார்க்கவிருக்கிறோம். ஆங்கிலத்தில் ஆத்துமா என்பது மரணத்துக்குப் பின்பும் இருக்கக்கூடிய மனித உடலில் இருக்கும் தொட்டுப்பார்க்க இயலாத ஒரு அம்சம் என்று காட்டினாலும், நெபேஷ் என்பதற்கு வேறு ஒரு பொருள் இருக்கிறது. மனிதன் உயிர் வாழ்கின்ற, மூச்சு விடுகின்ற, உடல் உள்ள ஒரு நபராக இது சொல்கிறது. இது உயிரைக் குறிக்கிறது. இந்த அற்புதமான சொல்லின் வேதாகம பொருளைக் கேட்டு ஆச்சரியப்பட ஆயத்தமாக இருங்கள்! #BibleProject #வேதாகமம் #ஆத்துமா
லெவ்/இதயம்
மனித மனதைப் பற்றி வெவ்வேறான கலாச்சாரங்களில் அது எப்படிப்பட்டது, அது என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பற்றி வெவ்வேறான புரிதல்கள் இருக்கும். வேதாகம எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்தக் காணொளியில் இதயம் என்பதற்கான ஆதிகாலத்து யூத சொற்கள் என்ன என்பதைக் காணவிருக்கிறோம். அத்துடன் நம் இதயத்தைக் குறிக்கும் வெவ்வேறான கருத்துக்களையும் பார்க்கவிருக்கிறோம். மனித சிந்தனை, உணர்ச்சி, விருப்பம் போன்றவற்றைக் குறிக்க வேதாகமத்தில் அருமையானதும் வளமானதுமான இதை விட சிறந்த சொல் ஒன்று இல்லை. சொற்களைக் கற்கும் நமது தொடர் காணொளிகளில் இது நான்காவது தவணையாகும். இது ஆதிகாலத்து வேதாகம ஜெபமாகிய ஷேமா என்பதைப் பற்றி ஆழமாகப் பார்க்கின்ற ஆறு பகுதிகளுள்ள ஒன்றாகும். இந்த ஜெபத்தில் உள்ள அனைத்து முக்கிய சொற்களையும் பற்றி நாம் விரிவாகக் காணவிருக்கிறோம். அவற்றின் மூல மொழியில், அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் அவற்றுக்கான பொருள் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #இதயம்