சிறையிருப்பின் வழி

இயேசுவைப் பின்பற்றும் அனைவருமே தேவ ராஜ்யத்துக்குத் தங்கள் உண்மையான அர்ப்பணிப்பைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? தங்களது வாழ்நாட்களில் இருக்கும் அரசாங்கம் மற்றும் அதிகார அமைப்புகளுடன் எப்படி அவர்கள் இடைப்பட வேண்டும்? இந்தக் காணொளியில் தானியேல் மற்றும் அவரது நண்பர்கள் பாபிலோனில் சந்தித்த அனுபவங்கள் இந்த அழுத்தத்தின் நடுவில் வழிகாட்டும் ஞானமாக இருக்கிற…அதிகமாக வாசிக்க

வானமும் பூமியும்

வானமும் பூமியும் ஒன்றை ஒன்று மூடிக் கொள்ளப் போகின்றன. இயேசு அவற்றை ஒரே தடவையாக ஒன்றாக்கும் ஒரு பணியில் இருக்கிறார். #BibleProject #வேதாகமம் #வானமும்பூமியும்

பலியும் நிவாரணமும்

மனிதர்களின் தீமையை மிருக பலியின் மூலம் கர்த்தர் மூடுதல் என்பது இறுதியில் இயேசுவையும் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலையும் நோக்கித் தான் நம்மை நடத்துகின்றது. #BibleProject #வேதாகமம் #பலியும்நிவாரணமும்

தமிழ்_புதிய ஏற்பாட்டு கடிதங்களின் இலக்கியம்

புதிய ஏற்பாட்டில், பண்டைய ரோமானிய உலகில் இயேசுவை பின்பற்றுபவர்களின் சமூகங்களுக்கு ஆரம்பகால கிறிஸ்தவ தலைவர்களால் எழுதப்பட்ட 21 கடிதங்கள் உள்ளன. இயேசுவைப் பின்பற்றுபவர்களின் சமூகமாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதற்கான இறையியல் மற்றும் வழிகாட்டுதலுடன் இந்த கடிதங்கள் நிறைந்துள்ளன, ஆனால் அவை மிகுதியானதாகவும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருக்கும். இந்த வீடியோவில், பண்டைய கடிதம் எழுதும் இலக்கிய பாணியைப் பற்றி நாம் ஆராய்வோம், மேலும் ஒரு கடிதத்தின் தொடக்கத்திலிருந்து அதன் இறுதி வரை முக்கிய யோசனைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும் காணலாம். #BibleProject #வேதாகமம் #தமிழ்_புதியஏற்பாட்டுகடிதங்களின்இலக்கியம்

வேதாகமக் கவிதையில் உள்ள உருவகம்

உருவகங்கள் எவ்வாறு வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேதாகமத்தின் கவிதைகளைக் கற்றுக் கொள்வதில் மிக முக்கியமான கருவியாகும். ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக இன்னொன்றை விளக்கும் போது அறிந்தோ அறியாமலோ உருவகத்தைப் பயன்படுத்துகிறார். வேதாகமம் முழுவதிலும் உருவகங்கள் இருக்கின்றன. நமது தினசரி உரையாடல்களிலும் இருக்கின்றன. இந்தக் காணொளியில் வேதாகம மொழியிலிருக்கும் இந்த முக்கியமான அம்சத்தைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #வேதாகமக்கவிதையில்உள்ளஉருவகம்

பரிசுத்த ஆவியானவர்

#BibleProject #வேதாகமம் # வீடியோ கிரெடிட்ஸ் தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு

Bible Project in Indian Languages

#BibleProject #வேதாகமம் #

புதிய ஏற்பாட்டு கடிதங்களின் வரலாற்றுச் சூழல்

புதிய ஏற்பாட்டில், பண்டைய ரோமானிய உலகில் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் சமூகங்களுக்கு ஆரம்பகால கிறிஸ்தவ தலைவர்களால் எழுதப்பட்ட 21 கடிதங்கள் அல்லது நிருபங்கள் உள்ளன. இந்தக் கடிதங்களைப் புத்திசாலித்தனமாகப் படிப்பது என்பது, அவற்றின் வரலாற்றுச் சூழலைப் பற்றி அறிந்து கொள்வதை உள்ளடக்குகிறது. யாருக்கு எழுதப்பட்ட கடிதங்கள், பெறுநர்கள் எங்கு வாழ்ந்தார்கள், கடிதத்தை அனுப்பத் தூண்டியது எது? இந்தக் கடிதங்களின் மூலம் வரலாற்றுச் சூழலின் பல்வேறு அடுக்குகளை இந்தக் காணொளியில் ஆராய்வோம், இதன் மூலம் அவர்கள் இன்னும் வழங்க இருக்கும் ஞானத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். #BibleProject #வேதாகமம் #புதியஏற்பாட்டுகடிதங்களின்வரலாற்றுச் சூழல்

தமிழ்_இயேசுவின் உவமைகள்

நாசரேத்தின் இயேசு ஒரு தலைசிறந்த பேச்சாளர், மேலும் அவருடைய மிகவும் பிரபலமான பல போதனைகள் உவமைகளாகக் கூறப்பட்டன. ஆனால் இந்த உவமைகள் வெறுமனே "கற்பிப்பதை" விட மிக முக்கிய நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய ராஜ்யத்தின் வருகையைப் பற்றிய தனது செய்தியை வெளிப்படுத்தவும் மறைக்கவும் இந்த உவமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று இயேசு கூறினார். இந்த காணொளியில், இயேசுவின் உவமைகளில் உள்ள முக்கிய கருப்பொருள்களை ஆராய்ந்து, அவற்றை அவர் ஏன் தனது செய்திக்கு முதன்மை வாகனமாக பயன்படுத்தினார் என்பதை காணப் போகிறோம். #BibleProject #வேதாகமம் #தமிழ்_இயேசுவின்உவமைகள்

சுவிசேஷங்கள்

புதிய ஏற்பாடு நாசரேத் ஊர் இயேசுவின் பழமையான வரலாற்று நூல்கள் நான்கைக் கொண்டிருக்கின்றது. அவை அனைத்தும் சுவிசேஷம் என்று அழைக்கப்படுகின்றன. சிலுவையில் அடிக்கப்பட்டு மீண்டும் உயிரோடு எழுந்த இயேசு தான் தேசங்களின் ராஜா என்ற வரலாற்றை ஒரு நற்செய்தியாக இந்த நான்கு சுவிசேஷங்களும் அறிவிக்கின்றன. இந்தக் காணொளியில் நாம் இந்த வரலாறுகள் ஏன் எழுதப்பட்டன என்பதையும் அவற்றை ஒரு சிறந்த கண்ணோட்டத்துடன் எப்படி வாசிக்க முடியும் என்பதையும் பார்க்கப் போகின்றோம். #BibleProject #வேதாகமம் #சுவிசேஷங்கள்

சாலொமோனின் புஸ்தகங்கள்

சாலொமோன் ராஜாவுடன் தொடர்புடைய மூன்று புத்தகங்கள் வேதாகமத்தில் உள்ளன. இவர் இஸ்ரவேலின் அரசர்களிலேயே மிகவும் ஞானமுள்ளவர். நீதிமொழிகள், பிரசங்கி மற்றும் உன்னதப்பாட்டு ஆகியவையே இந்த மூன்று புத்தகங்கள். ஒவ்வொன்றும் மனிதர்கள் எவ்வாறு ஞானத்தை உண்மையிலேயே பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு கனத்தை செலுத்த முடியும் என்பதைப் பற்றிய தனித்தன்மையுள்ள ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கின்றன. இந்தக் காணொளியில் நாம் சுருக்கமாக ஒவ்வொரு புத்தகத்தின் செய்தியையும் அத்துடன் அவை எவ்வாறு வேதாகமத்தின் மொத்த சரித்திரத்திலும் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம். #BibleProject #வேதாகமம் #சாலொமோனின்புஸ்தகங்கள்

மின்னஞ்சலில் உள்நுழை

Sign up for the TWR360 Newsletter

Access updates, news, Biblical teaching and inspirational messages from powerful Christian voices.

TWR360 இலிருந்து புதுப்பிப்புகளைப் பெற கையெழுத்திட்டதற்கு நன்றி.

தேவையான விபரம் காணப்படவில்லை